குறைந்த செலவில் செயல்படும் வென்டிலேட்டர்! மாணவர் சாதனை!

27 April 2020 அரசியல்
ruhdaar.jpg

இந்தியாவின் ஐஐடி கல்லூரியில் படித்து வருகின்ற மாணவர், குறைந்த செலவில் செயல்படக் கூடிய வெண்டிலேட்டர் கருவியினை, தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வைரஸிற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான, வென்டிலேட்டர்கள் தற்பொழுது குறைவாகவே உள்ளன. அதனை தயாரிக்கும் முயற்சியில், மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வேகமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மும்பை ஐஐடி கல்லூரியினைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, வென்டிலேட்டர் கருவியினை உருவாக்கி உள்ளது. இதற்கு ருத்தார் என்றுப் பெயரிட்டுள்ளது. இது தற்பொழுது இந்திய மருத்துவக் கழகத்தின் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. முற்றிலும், இந்தியாவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, இது தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு மருத்துவக் கழகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், விரைவில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

HOT NEWS