இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பாக்யராஜ். தன்னுடையப் பல படங்கள் மூலம், சில்வர் ஜூப்ளியினைக் கண்ட மாபெரும் நடிகர். இவரை திரைக்கதை பிதாமகன் என அனைவரும் அழைக்கின்றனர்.
அப்படிப்பட்டவரின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து இருந்தது தான் முந்தாணை முடிச்சு. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்திற்கு பிறகு, பாக்யராஜ்ஜின் இமேஜே மாறிவிட்டது. முருங்கைக்காய் என்றால், அது பாக்யராஜ் என்ற அளவிற்கு, இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
அப்படிப்பட்ட படத்தினை தற்பொழுது மீண்டும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 36 வருடங்கள் கழிந்த பின்னர், தற்பொழுது அந்தப் படத்தினை ஜேஎஸ்பி சதீஷ் தயாரிக்கின்றார். இந்தப் படத்தில், சசிகுமார் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் ஆகியவைகளை பாக்யராஜ் எழுதுகின்றார். பாலாஜி இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தப் படத்தில் நடிக்க உள்ள, பிறக் கதாப்பாத்திரங்களின் தேர்வு நடைபெறாமல் உள்ளது. ஊரடங்கு நீங்கியதும், படத்தின் சூட்டிங் உட்பட பிற பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.