உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

07 December 2019 அரசியல்
supremecout.jpg

ஏற்கனவே அறிவித்த, டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பினை, ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

டிசம்பர் 2ம் தேதி அன்று, தமிழகத் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும், வருகின்ற டிசம்பர் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என, அறிவிப்பினை வெளியிட்டது.

இதனை எதிர்த்து, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிதாக ஒன்பது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவைகளில் சரியாக வார்டுகள் வரையறுக்கப்படவில்லை எனவும், கிராமங்கள், உள்கிராமங்கள் மற்றும் நகராட்சிகளில் போதுமான தேர்தல் பணிகள் நடைபெறவில்லை எனவும், எனவே உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த உத்தரவிடக் கோரி மனுவில் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்பொழுது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அது தேர்தலைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும், வாக்குப்பதிவு குறைய வாய்ப்பிருப்பதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், புதிய அறிவிப்பானது விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS