நடிகர் விஜயின் அடுத்த படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என்றத் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் தளபதி விஜய். தற்பொழுது அவர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருவதற்குத் தயாராக உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே-17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து திரைப்பட வேலைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்தில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அவருடைய பட்டியலில், பல இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகின்றன. புதிய இயக்குநர்களுக்கு அவர் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் விஜயின் அடுத்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என்றத் தகவல் கசிந்துள்ளது. தொடர்ந்து சில படங்களாக, விஜயின் படங்களில் துள்ளலான இசை இல்லை என, ரசிகர்கள் குமுறினர். திரையறங்கிற்கு வரும் அவர்கள், ஆடுவதற்கு ஏற்றாற் போல பாடல்கள் வேண்டும் என்றும் கூறினர். மாஸ்டர் படத்தில், அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் அதற்கேற்றாற் போல அமைந்துள்ளது.
அதை விட, மிகவும் துள்ளலான இசைக்கு தமனே சரியா ஆளாக அனைவரும் நினைக்கின்றனர். அவருடைய இசையில், தெலுங்கு மற்றும் தமிழில் பலப் படங்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்பொழுது விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது.