ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, 7 கோடி ரூபாயினை துப்பாக்கி முனையில், 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டூ பாகலூர் சாலையில், பிரசித்திப் பெற்ற கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலையில் கடையினை திறந்துள்ளனர். அப்பொழுது, தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த மர்மநபர்கள் கடைக்குள் வந்துள்ளனர். கையில் வைத்திருந்த தூப்பாக்கியினைக் காட்டி, அங்கு வேலை செய்த ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.
அத்துடன், அங்கிருந்த 96,000 ரூபாய் ரொக்க பணத்தினையும், ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வில், கடையினைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள், பெங்களூரு வரையிலும் தங்களுடைய தேடுதல் வேட்டையினை விரிவுப்படுத்தி உள்ளனர். அந்த சிசிடிவி கேமிராவினை போலீசார் பார்வையிட்டதில், ஊழியர்களின் கைகளை அந்த ஹெல்மெட் அணிந்திருந்தக் கொள்ளையர்கள், இருக்கையில் அமர வைத்து கையினைக் கட்டிப் போட்டு உள்ளனர்.
பின்னர், அங்கிருந்தவர்களை மிரட்டி கஜானா சாவியினை வாங்கிச் சென்று நகைகளையும், பணத்தினையும் கொள்ளையடித்து உள்ளனர்.