நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெளியீடு! மீண்டும் தனித்துப் போட்டி!

26 September 2019 அரசியல்
naamtamilarcandidate.jpg

விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் பகுதிகளில், நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சித் தனித்துப் போட்டியிடுகிறது.

இதற்கான, தன்னுடைய வேட்பாளர் பட்டியலை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் பகுதியில் பிரவீன மதியழகன் போட்டியிடுகிறார். அவர் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றவர் ஆவார். நாங்குநேரி தொகுதியில், இளங்கலை வரலாறு படித்துள்ள சா.ராஜநாராயணன் போட்டியிடுகிறார். அதே போல், விக்கிரவாண்டித் தொகுதியில் சமூக செயற்ப்பாட்டாளர் திரு. கு.கந்தசாமி போட்டியிடுகின்றார்.

வேட்பாளர்கள் பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள, நாம் தமிழர் கட்சி, விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக, அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

HOT NEWS