தமிழ் சினிமாவின் நீண்ட கால காதல் ஜோடியாக, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இருந்து வருகின்றனர். நயன்தாரா எங்கு சென்றாலும், கூடவே விக்னேஷ் சிவனும் செல்கின்றார். அது போல, விக்னேஷ் சிவனிற்காக மற்ற நடிகர்களிடம் வாய்ப்பு கேட்கின்றார் நயன். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர்.
இதனிடையே, இவர்களுடையக் காதலை மையமாக வைத்து, ஒரு படத்தினை இயக்கியுள்ளார் இயக்குநர் கோபி. இது பற்றி அவர் பேசுகையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலை மையமாக வைத்து ஒரு படத்தினை உருவாக்குகிறோம் என்றார். இந்தப் படத்திற்கு, நானும் சிங்கிள் தான் என்றுப் யெர் வைத்துள்ளனர். இதில், கதாநாயகனான தினேஷும், நாயகியாக தீப்தி திவேஷ்ம் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில், நயன்தாரா போல ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கின்றார் நாயகன். இதனால், நயனின் படத்தினை உடலில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். காதலால் அவர் என்ன ஆகின்றார் என்பது தான் படத்தின் கதை என்றார்.