நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது! நீதிமன்றத்தில் விவாதம்!

16 October 2019 சினிமா
highcourt.jpg

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக, நடத்தப்பட்டத் தேர்தல் செல்லாது என, தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

இந்த விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிப் பெற்றாலும் வெற்றி பெற்றார், அப்பொழுது முதல் அரசியல்வாதிகளின் தேர்தலைக் காட்டிலும், நடிகர் சங்கத் தேர்தல் தான் பேசும் பொருளாகவே மாறியுள்ளது. 2016ல் நடைபெற்ற தேர்தலில் வென்ற பின், கட்டிடம் கட்டித் தருகிறேன் எனக் கூறி, பலக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் வந்த நிதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, நடிகர் சங்கத்துக்கானத் தேர்தல் நடைபெற்றது. அதில், சுமார் 80% பேர் வாக்குப் பதிவு செய்தனர். அதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், நடத்தப்பட்டுள்ளத் தேர்தல் சட்டப்படி செல்லாது எனவும், தேர்தல் அறிவிப்பும் செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இதனை விசாரித்த நீதிபதி முன்னிலையில், தமிழக அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதில், நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்து ஆறு மாதங்களைத் தாண்டி விட்டன. நடிகர் சங்க விதிகளின் படி, 3 ஆண்டு காலமேப் பதவிக் காலம் ஆகும். ஆனால், 3 ஆண்டுகளையும் கடந்து, அந்த நிர்வாகிகள் பதவியில் இருந்துள்ளனர். மேலும், அவர்கள் அந்தத் தேர்தலை நடத்தியும் உள்ளனர். பதவியில் இல்லாதவர்கள் நடத்தியத் தேர்தல் செல்லாது என வாதிட்டார்.

இதனிடையே நடிகர் சங்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பேசுகையில், பதவிக் காலம் முடிந்த பின் தேர்தல் நடத்தக் கூடாது என எவ்வித சட்டமும் இல்லை. இந்நேரம் தேர்தல் முடிவினை அறிவித்து இருந்தால், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பர் எனவும் கூறினார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வரும் 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

HOT NEWS