மிக விறுவிறுப்பான, பரபரப்பான திரைக்கதையுடன் வெளியாகி, சக்கைப்போடு போட்ட திரைப்படம் நாடோடிகள். இந்தப் படத்தின் பாடல்களும் சரி, படக்காட்சிகளும் சரி பிரமாதமாக இருக்கும். அதனால் தான், இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் இந்த நாடோடிகள்-2.
இந்தப் படத்தில், சசிகுமார் ஒரு கம்யூனிஸ்ட். தன் நண்பர்களுடன் இணைந்து, சாதிக்கு எதிராகப் போராடுகின்றார். இதனை அங்கு இருக்கும் சாதி சங்கத் தலைவருக்குப் பிடிக்கவில்லை. இதற்கிடையில், அதுல்யா ரவியினை சசிகுமாருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். முதலிரவு அன்று, அதுல்யா தற்கொலைக்கு முயல்கின்றார். தன்னுடைய காதலைப் பற்றியும் கூறுகின்றார். வீட்டில் வற்புறுத்தியதன் காரணமாகவே, திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுகின்றார்.
இதனால், அதுல்யாவினை காதலுடனேயே சேர்த்து வைக்கின்றார் சசிகுமார். அவர்களைக் கொல்ல, பெண் வீட்டார் தேடுகின்றனர். மீண்டும் ஓட ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையில், அஞ்சலி யார், அவருக்கும் சசிகுமாருக்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவாக விளக்கியும் இருக்கின்றார் இயக்குநர் சமுத்திரக்கனி.
படத்தின் கதையானது, முதல் பாகத்தினைப் போல் இல்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலைக்குப் பரவாயில்லை என்றுக் கூறலாம். பாடல்கள் பரவாயில்லை என்றாலும், சம்போ சிவ சம்போ பாடல் போன்று புதிதாக எதையாவது கொடுத்திருக்கலாம். அதே பாடலைத் தான், இதிலும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே, இப்பாடலை பலநூறு முறைக் கேட்டதால் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் நாடோடிகள்-2 பரவாயில்லை.