நாகர்கோவில் காசியின் வழக்கினை, சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தினை சேர்ந்த காசி என்பவர், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றில், லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தார். இந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்படுவதை அறிந்த பெண்கள் போலீசில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து, காசி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
தன்னுடன் நெருக்கமாகப் பழகும் பெண்களுடன் தனிமையில் இருக்கும் பொழுது, அவர்களை வீடியோ, போட்டோ எடுப்பது அதனை வைத்து அந்தப் பெண்களை மிரட்டுவது என தொடர்ந்து காசி செய்து வந்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவன் மறைத்து வைத்திருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவைகளைப் போலீசார் கைப்பற்றினர். ஒரு லேப்டாப்பினைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இவருடைய இந்த செயலுக்கு உதவியாக இருந்து வந்த, இவருடைய நண்பர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நாகர்கோவில் மாவடத்தினைச் சேர்ந்த காசியின் மீது அடுக்கடுக்கானப் புகார்கள் வந்தன. இதனால், போலீசாருக்கு இந்த வழக்கில் அதிக சுமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடி பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார் தமிழக காவல் ஆணையர் திரிபாதி. இந்த வழக்கினை, தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதால், காசியின் லீலைகள் அனைத்தும் கண்டிப்பாக சிக்கும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.