தற்கொலை செய்வதாக கூறிய நளினி நலமுடன் உள்ளார்! மருத்துவர் அறிக்கை!

22 July 2020 அரசியல்
nalini.jpg

தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக கூறிய நளினி, தற்பொழுது நலமுடன் உள்ளதாக மருத்துவர் அறிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட நளினியினை விடுவிக்க, பல அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. 55 வயதான நளினி, மூன்று தசாப்பதங்களாக சிறையில் உள்ளார்.

அவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று, தன்னை சிறையில் உள்ள போலீஸ் அதிகாரி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்துகின்றார் என்றுக் கூறினார். இதனால், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன் எனவும் கூறினார். இது குறித்து பேசிய சிறைத்துறை அதிகாரி, இது பிளாக் மெயில் ஆகும். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை எனவும் கூறினார். இது குறித்து, அதிகாரிகள் விசாரிக்கையில், சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியினை நளின்னி துன்புறுத்தி உள்ளார்.

அவரை, இவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார். இதனால், பயந்து போன பெண், தன்னை வேறொரு அறையில் அடைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை வேறொரு அறையில் அடைத்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றுக் கூறியுள்ளார் நளினி. இது குறித்து, இரவு 8.30 மணிக்கு ஜெயிலர் நளினியிடம் சென்று விசாரித்து உள்ளார்.

அந்த விசாரணையின் பொழுது, ஜெயிலருக்கும் நளினிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் நளினி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவர்கள், நளினியினை ஆய்வு செய்தனர். அதில், நளினிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS