ஆற்றில் அடித்துச் செல்லும் குழந்தையை காப்பாற்றும் காவலர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

04 August 2019 அரசியல்
namakkalpolice.jpg

நாமக்கல்லில் உள்ள ஆற்றில் குழந்தை அடித்துச் செல்லப்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்தக் குழந்தையின் சப்தத்தைக் கேட்டு, உடனடியாக, நீரில் குதித்து அக்குழந்தையை மீட்டனர்.

இருப்பினும், அக்குழந்தை மூர்ச்சையாக இருந்ததால், அக்குழந்தையைக் காப்பாற்ற தொடர்ந்து விடாமல் முதலுதவி செய்தனர். அக்குழந்தை இவர்களின் முயற்சியால் எழுந்தது. பின்னர், அழ ஆரம்பித்து விட்டது. அக்குழந்தையைத் தூக்கி, அவர்கள் ஆறுதல் கூறிய வீடியோ, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

HOT NEWS

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

24 May 2019 அரசியல்
modi1.jpg

ஈரானிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை சற்றும் மதிக்காத இந்தியா ஈரானிடம் பெருமளவிலான கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டது.

இதனால், இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்க மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், வியாபாரத்தின் காரணமாக இன்று வரை பொருளாதாரத் தடை விதிக்கப்படவில்லை.

மேலும், தற்பொழுது புதிய தகவல் பரவி வருகிறது. அதன் படி, தற்பொழுது, இந்தியா ஈரானிடம், டாலரில் எண்ணெய் வாங்காமல் ரூபாயில் வாங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. பாதி ரூபாயாகவும், மீதிப் பணத்திற்கு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் மூலம் ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

ஈரான் தற்பொழுது, குறைந்த விலைக்கு எண்ணெய் விற்கிறது. மேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கி 60 நாட்களுக்குப் பின், பணம் தந்தால் போதும் என்ற காரணங்களுக்காக, இந்தியா தற்பொழுது ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

HOT NEWS