அஹமதாபாத் முதல் ஆக்ரா வரை! மோடி-டிரம்ப் நடந்தது என்ன? விரிவான பார்வை!

25 February 2020 அரசியல்
donaldtrumpvisit.jpg

ஏற்கனவே திட்டமிட்டபடி, இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரை, விமான நிலையத்திற்கு சென்ற இந்தியப் பிரதமர் மோடி, வரவேற்றார். பின்னர், அங்கிருந்து குஜராத்தின் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

அங்கு, காந்தியின் திரு உருவப் படத்திற்கு, கைத்தறி துண்டினை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையடுத்து, அங்கிருந்த காந்தியப் பயன்படுத்திய நூல் நூற்கும் இராட்டையினை பயன்படுத்துவது குறித்து, மோடி சொல்லிக் கொடுத்தார். பின்னர், டொனால்ட் டிரம்ப்பும், மனைவி மெலானியா டிரம்ப்பும் நூல் நூற்றனர்.

அங்கு அவர்களுக்கு, தேநீர் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து, அஹமதாபாத் நகரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட மோதிரா மைதானத்திற்கு, அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் சென்றனர். அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், இருவரும் உரையாற்றினர். பின்னர், அங்கிருந்து கிளம்பி, ஆக்ராவிற்கு சென்றனர்.

அங்கு தன்னுடைய மனைவியுடன், அதிபர் டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அங்கிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அதிபர் டிரம்ப் சென்றார். அங்கு அவருக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தனியார் ஓட்டலுக்கு இரவு உறங்கச் சென்றார். இன்று காலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட மரியாதையினை ஏற்றார்.

HOT NEWS