ஊர் பெயர்களை தமிழில் மாற்றும் திட்டம் வாபஸ்! மீண்டும் வந்தது எக்மோர்!

19 June 2020 அரசியல்
mafoikprajan.jpg

தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பிலேயே ஆங்கிலத்தில் மாற்றப்படுவதாக அறிவித்த, அரசின் திட்டமானது மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 1018 இடங்களுக்கு அதன் பெயரினை ஆங்கிலத்தில் உச்சரிக்கும் பொழுதும், தமிழ் உச்சரிப்பு உருவாகும் விதத்தில் பெயரில் மாற்றங்கள் செய்யப்படும் என, தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்தது. ஜூன் பத்தாம் தேதி இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதனால், Coimbatore என்ற பெயர் Koyampuththoor ஆனது. இது போல், 1018 இடங்களுக்கு இவ்வாறு பெயரில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், இதற்குப் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் பத்தாம் தேதி வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS