21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு! மோடி அதிரடி வேண்டுகோள்!

24 March 2020 அரசியல்
modicovid19.jpg

இந்தியா முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், இன்று (24-03-2020) இரவு எட்டு மணிக்கு மக்களிடம் வீடியோ மூலம் உரையாடினார் பிரதமர் மோடி.

அவர் பேசுகையில், மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த வைரஸானது, ஒருவருடன் இருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக் கூடியது. நம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை, ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் அனைவரையும் கையெடுத்துக் கும்பிடுகின்றேன். யாரும் வீட்டினை விட்டு வெளியே வர வேண்டாம்.

இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்க உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, மருந்து விற்பனை முதலயவைகள் வழக்கம் போல் இயங்கும். மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் எனப் பொதுப் பணியினை மேற்கொள்பவர்களுக்கு என்னுடைய நன்றிகள். அவர்களின் சேவையானதுத் இந்த ஊரடங்கின் பொழுதும் தொடரும்.

இந்த ஊரடங்கு உத்தரவிற்கு, அனைத்து இந்தியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் யாரும் நம்ப வேண்டாம். இதன் மூலம், நாம் கொரோனா வைரஸிற்கு எதிராக போராட முடியும். அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS