இன்று ஆறாவது தவணையாக விவசாயிகளுக்கு 17,000 கோடி கடனுதவியினை பிரதமர் மோடி வழங்கி தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக, கடந்த மே 12ம் தேதி அன்று ஊரடங்கு நிவாரண திட்டங்களை அறிவித்து வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக 20 லட்சம் கோடி அளவிலான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி அளவிலான கடனுதவியினை வழங்க உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனேவை ஐந்து தவணைகளாக, விவசாயிகளுக்கான கடனுதவியினை பிரதமர் மோடி வழங்கினார். இந்த சூழலில் இன்று, 17,000 கோடி அளவிலான கடனுதவியினை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த பணத்தின் மூலம், 8.5 கோடி விவசாயிகள் பயனடைவர். இந்தத் திட்டத்தில் எவ்வித இடைத்தரகர்களோ, கமிஷனோ இல்லை. நேரடியாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தினை நினைத்து நான் திருப்தி அடைகின்றேன். ஒரே நாடு ஒரே சந்தை என்றத் திட்டத்தின் என்பது தற்பொழுது சாத்தியமாகி உள்ளது. இனி வரும் காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். பலராமர் பிறந்த நாளான ஹலஸ்டிடி நாளின் காரணமாக, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.