அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது! ராமர் கோவில் தேசத்தினை ஒருங்கிணைக்கும்!

05 August 2020 அரசியல்
modiayodhicermony.jpg

அயோத்தியில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமர் கோயிலுக்கு பூமி பூஜையானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இது குறித்து அவர் பேசுகையில், இது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். அயோத்திக்குத் தற்பொழுது விடுதலை கிடைத்துள்ளது. அயோத்தியில் மிகப் பெரிய மாற்றமே உண்டாக உள்ளது. இதற்காக போராடிய லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, எனக்கு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றிகள்.

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்பது, இந்தியர்களின் ஒரு மித்த எண்ணம் ஆகும். அது தற்பொழுது நிறைவேறி உள்ளது. உலகின் பல கோடி மக்கள் இந்த நிகழ்வினைக் கொண்டாடுகின்றார்கள். கோடான கோடி மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இந்தக் கோயில் கட்டப்படும். தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் இராமரின் புகழைப் பறைசாற்றுகின்றது. அதே போல், லாவோஸ், கம்போடியா, மலேசியா உள்ளிட்டப் பல மொழிகளிலும், நாடுகளிலும் இராமர் வழிபாடு தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது.

ராம ராஜ்ஜியத்தில் வேற்றுமைகள் கிடையாது. அனைவரும் சமமே. இறைவனுக்கும், மக்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பினை இராமர் கோயில் ஏற்படுத்தும். ராமர் கோயில் விஷயத்தில் மக்களிடம் இருந்து வந்த உறுதி, யாராலும் மறக்க இயலாது. அனைவரும் இணைந்து சுதேசப் பாரதத்தினை உருவாக்குவோம் என்றுப் பேசினார்.

HOT NEWS