Pic Credit: Nasa.gov.in
விண்வெளி என்றாலே அதியம் மற்றும் ஆச்சர்யத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில் தான் பல புகைப்படங்கள் மற்றும் விநோதமான விஷயங்களை, அதனை ஆய்வு செய்யும் உலகின் முன்னணி நிறுவனமான, அமெரிக்காவின் நாசா நிறுவனம், தன்னுடைய வலைதளத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.
அவைகளில் ஒன்று தான் இந்த கடவுளின் கை. ஆம், விண்வெளியில் கடவுளின் கையைப் போன்ற அமைப்பை நாசா புகைப்படம் எடுத்துள்ளது. இதனை, அதிநவீன எக்ஸ்ரே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி எடுத்துள்ளது.
இதனைப் பற்றிக் கூறியுள்ள நாசா, ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறும் பொழுது, அது இதுபோன்ற அமைப்பினை உருவாக்கும் ஒளியினையும், சிதறல்களையும் வெளியிட்டுள்ளது. அதுப் பார்ப்பதற்கு கடவுளின் கையைப் போன்று உள்ளது எனவும் கூறியுள்ளது.
பல்சர் விண்ட் நெபுலா எனும் இந்த அமைப்பானது, சூப்பர் நோவா வெடிப்பு எனும் வெடிப்பின் பொழுது, உருவானது. இந்த அமைப்பில், இருந்து, சக்தி வாய்ந்த, எக்ஸ்-ரே ஒளி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது எனவும், வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பொருட்கள் அனைத்தும் இணைந்து, இந்தக் கையினை உருவாக்கியுள்ளது எனவும் கூறியுள்ளது.
இதனைப் பார்க்கும் பொழுது, உங்களுக்கு என்னத் தோன்றுகிறது. கோவிந்தா கோவிந்தா!
Source: www.nasa.gov/jpl/nustar/B1509-pia17566