நாசா உதவியுடன் விக்ரம் லேண்டர் தேடும் பணி தீவிரம்!

13 September 2019 தொழில்நுட்பம்
isrovikramlander.jpg

விக்ரம் லேண்டர் தொலைந்து ஏழு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதனைத் தேடும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

விக்ரம் லேண்டர் தொலைந்த பின், அடுத்த 14 நாட்களுக்குள் அதிலிருந்து சிக்னலைப் பெறும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள் என, இஸ்ரோ தலைவர் திரு. சிவன் அவர்கள் கூறியிருந்தார்.

இதனை முன்னிட்டு, கடும் முயற்சிக்குப் பின், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தினை, நிலவினை சுற்றி வரும் ஆர்பிட்டரின் உதவி கொண்டு கண்டுபிடித்தது இஸ்ரோ.

இருப்பினும், அதிலிருந்து எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லை என்பதால், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நிலவில் விழுந்தாலும், நொறுங்காமலும், உடையாமலும் விக்ரம் லேண்டர் இருப்பதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இதனாலேயே, ஆர்பிட்டரின் உள்ள வெப்பத்தை கணிக்கும் கருவியின் உதவியுடன், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடித்தது இஸ்ரோ.

இருப்பினும், நாட்கள் சென்று கொண்டே இருப்பதால், அதனை எப்படியாவது மீட்க வேண்டும் என, தற்பொழுது நாசாவின் உதவியை நாடியுள்ளது. நாசாவின் மூன் ஆர்பிட்டர் தொடர்ந்து, நிலவினை சுற்றி வருகிறது. இதன் காரணமாக, அதனைப் பயன்படுத்தி, விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்க உள்ளது இஸ்ரோ. இந்தப் புகைப்படம் நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS