தேசிய குடிமக்கள் பதிவேடு! அமித் ஷா அதிரடி!

21 November 2019 அரசியல்
amithshah1.jpg

சட்டவிரோதமாக, இந்தியாவிற்குள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைத் தடுக்கும் பொறுட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் மற்றும் வங்கதேச விடுதலையினை அடுத்து, சட்டவிரோதமாக, பல லட்சம் பேர், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். இந்நிலையில், இந்தியாவில் அவ்வாறு குடியேறிவர்களின் எண்ணிக்கையானது, அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினைப் புதுப்பிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பல ஆய்வுகளுக்குப் பிறகு, வரைவறிக்கை வெளியானது.

அதில், கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருந்தன. இதனால், பல எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பின. மதத்தினை மையமாக வைத்து, பலரின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்மதா பேனர்ஜி குற்றம் சாட்டினார். இதனால், மீண்டும் அந்த வரைவறிக்கை திருத்தப்பட்டது. அதிலும், சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன.

தொடர்ந்து, இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டினைப் பராமரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நேற்று நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதன் மூலம், இந்தியாவிற்குள் இனி யாரும் சட்டவிரோதமாக குடியேற முடியாது எனக் கூறினார். மேலும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அதிகாரப்பூர்வமாக கண்டறிய இயலும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS