இன்று உலகம் முழுவதும் உள்ள, பல்வேறு திரையறங்குகளில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள, நட்பே துணைத் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதன் திரை விமர்சனத்தைப் பார்ப்போம்.
படத்தில், ஹாக்கியையும், வியாபாரத்தையும் மையமாக வைத்து உருவாக்கியுள்ளனர். ஹாக்கி வீரராக வந்து நம்மை ரசிக்க வைக்கிறார் ஆதி. உள்ளூரில் உள்ள ஹாக்கி மைதானத்தைப் பாதுகாப்பதற்காக, வியாபாரம் செய்ய வந்துள்ள, மருந்து விற்கும் நிறுவனத்தை எதிர்த்து போராடுகிறார் ஆதி. அவர் தன்னுடையப் போராட்டத்தில் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை!
படத்தில் பிஜிலி ரமேஷ், எரும சானி விஜய், என பலரும் நடித்திருக்கின்றனர். எனினும், காமெடி குறைவாகவே உள்ளது. படத்தில் வருகின்ற பாடல் காட்சிகள் மிக சிறப்பாக, ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பாராட்டத்ததக்க விஷயம் ஆகும். பாடல்கள் அனைத்தும் அருமை.
ஆதியின் நடிப்பு மெருகேறியுள்ளது என்று தான், கூற வேண்டும். முதல் பாதி முழுக்க கலகலப்பாக செல்லும் நட்பே துணை, இரண்டாவது பாதி முழுக்க ஹாக்கி மைதானத்தை சுற்றியே நடக்கிறது.
படத்தில் வரும் கரு.பழனியப்பன் நடை, உடை, நடிப்பு என அனைத்திலும் நேர்த்தியான அரசியல்வாதியாக காட்சியளிக்கிறார்.
ஆதியின் நடிப்பு படத்திற்கு மாபெரும் பக்க பலமாக உள்ளது.
படத்தின் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது.
படத்தில் கூறப்பட்டுள்ள விஷயம், மற்றும் நேர்த்தியான கதை.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள், கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்துள்ளனர்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகமாக செல்வது படத்தின் மிகப்பெரிய பலம் ஆகும்.
பலவீனம்:-
படத்தில் வரும் காதல் காட்சிகள் சளிப்படைய வைக்கின்றன.
மொக்கையான திரைக்கதை.
எத்தனையோ முறை இந்த மாதிரிக் கதைகள் தமிழிலேயே படமாக எடுக்கப்பட்டுவிட்டன.
படத்தின் ஒரு சில இடங்கள் போர் அடிக்கும் வகையில் இருப்பது.
படம் முழுக்க ஆதியை மட்டுமே பெரிதாக காட்டுவது.