பாக்கியராஜ் படமான, இன்று போய் நாளை வா! படத்தை சுட்டு, கண்ணா லட்டுத் திண்ண ஆசையா! படத்தை எடுத்தனர். கணா லட்டுத் திண்ண ஆசையாப் படத்தைச் சுட்டு, நட்புன்னா என்ன தெரியுமா, படத்தை எடுத்துள்ளனர் அவ்வளவு தான்.
சின்னத் திரையில் வெற்றிகரமாக ஓடிய, சரவணன் மீனாட்சித் தொடரில், நல்ல பெயர் பெற்ற நடிகர் கவின், இத்திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார். துணை நடிகர்களாக, ராஜூ மற்றும் அருண் ராஜகாமராஜ் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக, நடித்துள்ளார்.
பெரிய அளவில் டிவிஸ்ட்லாம் இல்லை. கவின், அருண் மற்றும் ராஜூ ஆகியோர் பால்ய நண்பர்கள். இருவரும் படித்து முடித்துவிட்டு கல்யாணத்திற்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும், வேலையை செய்து கொண்டு, இருக்கின்றார்கள். ஒரு நாள், ரம்யா நம்பீசனைப் பார்க்கின்றார் நாயகன் கவின். அவ்வளவு தான். காதல் வந்துவிட்டது. இதனிடையே, நடிகர் ராஜூவும் ரம்யாவை காதலிக்கிறார். அருண், ராஜூவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். இதில் யார் காதல் ஜெயித்தது. நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.
படத்தின் இரண்டாம் பாதி, நன்றாக ரசிக்கும் விதத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு வேளை, படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தால், கண்டிப்பாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்து இருக்கும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.
என்ன ரம்யா நம்பீசனுக்குத் தான், கொஞ்சம் வயசான சாயல் தெரியுது. மத்தப்படி, ரம்யாவை அனைவரும் ரசிக்கலாம். புதுமுக நடிகர் ராஜூ, புதுமுகம் மாதிரியே இல்லை. அவ்வளவுப் பிரமாதமான நடிப்பு. உண்மையைச் சொன்னால், கவினை விட இவருக்குத் தான் படத்தில் அதிக இடம். மொத்தத்தில் நட்புன்னு, என்ன தெரியுமா? வெற்றி பெறுமா?