ஆண்கள் பலருக்கும், தற்பொழுது விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது உடல் உஷ்ணமும், போதிய உடல் உழைப்பு இல்லாததும் ஆகும். தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே, கணினி முன் வேலைப் பார்ப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கின்றது. மேலும், அந்த வெப்பத்தினை வெளியேற்ற போதிய அளவிலான நீரும் குடிப்பது கிடையாது.
அது மட்டுமின்றி, உடற்பயிற்சியும் யாரும் தற்காலத்தில் பெரிய அளவில் செய்வது கிடையாது. இதனால், விந்தணுவானது வலிமை இழக்கின்றது. மேலும், அதன் வீரியமும், கருமுட்டைக்குள் நுழையும் சக்தியும் இல்லாமல் போய்விடுகின்றது. இந்தப் பிரச்சனைகளை, கீழ்காணும் உணவுகளை உண்பதன் மூலம், விந்தணுவின் சக்தியினையும், அதன் அளவினையும் அதிகரிக்கலாம்.
இதன் பயன் பலருக்கும் தெரியும். வெளிநாட்டு உணவுப் பழங்களை விட்டுவிட்டு, இந்திய உணவிற்கு வாருங்கள். இதில், இல்லாதது என்று எதுவும் இல்லை. அத்திப் பழத்தினை சாப்பிடுவதன் மூலம், இரத்த விருத்தி ஏற்படும். மேலும், உடலில் உள்ள விந்தணுவின் சக்தியானது அதிகமாகும். மேலும், இந்தப் பழத்தின் விலையும் மிகக் குறைவு. உடலிற்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாது. ஆண், பெண், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் உண்ணலாம். அத்திப் பழச்சாறு 30 ரூபாய் முதல் கிடைக்கின்றது அதனைக் குடிப்பதும், உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
பிராய்லர் முட்டையில் புரதம் இருந்தாலும், அது நாட்டுக் கோழி முட்டையின் அளவிற்கு வலிமைத் தருவது இல்லை. நாட்டுக் கோழி முட்டையினை தினமும் உண்பதன் மூலம், உடலில் மாவுச் சத்தும், புரதச் சத்தும் அதிகமாகும். இது, விந்தணுவினை, கருமுட்டைக்குள் நுழைக்கும் சக்தியினை அளிக்கும்.
பச்சைப் பயறு, தட்டைப் பயறு முதலியவைகள் மிக மலிவான விலையில் கிடைக்கக் கூடியவை. அவைகளை, குழம்பு வைத்து உணவாக உண்டாலும் சரி, வேக வைத்து உண்டாலும் சரி. அல்லது மாவாக மாற்றி, உண்டாலும் சரி. இது மிகவும் நன்மை அளிக்கக் கூடியது.
காராமணி என்னும் தானியத்தினை, முடிந்த வரை அதிகளவில் உண்ணும் பொழுது, ஆணுறுப்பின் வலிமை அதிகரிக்கும். மேலும், விந்துவின் நீந்தும் திறனும் கூடும். பூசணிக்காயினை கூட்டாக எடுத்து கொள்வது நல்லது.
மொச்சைப் பயறினை உணவாக உண்டால், ஆணுறுப்பின் சதையானது வலிமை பெறும். நல்ல வளர்ச்சியும் அடையும். வேர்க்கடலை, பேரிச்சங்காய் முதலியவைகள் மிகவும், சுவையானவை. இவைகளை உண்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
நாகாசனம், பட்டாம்பூச்சி ஆசனம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை தினமும், செய்வதன் மூலம், உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை கூடும். இதனால், ஆணுறுப்பானது வலிமை அடையும்.
குளிர் பானங்களைத் தவிர்த்து பழச்சாறுகளை குடிப்பதும், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடல் சூட்டினைத் தணிக்கும். உடல் புத்துணர்ச்சிப் பெற உதவும். இவைகளையும் செய்வதன் மூலம், விந்தணு உற்ப்பத்தியினை அதிகரிக்கலாம்.