நாவஸ் ஷெரீபிற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான்!

13 November 2019 அரசியல்
nawazsharif.jpg

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல, பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டிருந்தார் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு நவாஸ் ஷெரீப். அவருக்கு தற்பொழுது, அனுமதி வழங்கியுள்ளது பாகிஸ்தான்.

பனமா பேப்ரஸ் ஊழல் விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட, நவாஸ் ஷெரிப் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றார். இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில், நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை இருந்து வந்தது. அவருக்கு, 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை உடல்நிலை சற்று சரியானதும், அவருக்கு அவருடைய வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அவர் உடல்நலம் பரிபூரணமாக குணமாவதற்கு வெளிநாடு சென்று தான் மருத்துவ சிகிச்சைகளைப் பெற இயலும். எனவே, அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. அவர் வெளிநாடு செல்ல ஏற்கனவே, தடை விதித்திருந்தது உச்சநீதிமன்றம். இருப்பினும், உடல்நிலையினைக் கருத்தில் கொண்டு, அவர் தற்பொழுது வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அவர் விரைவில், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக செல்ல உள்ளார்.

HOT NEWS