சுசி கணேசன் இயக்கும் படத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா?

28 December 2020 சினிமா
nayantharanext.jpg

இயக்குநர் சுசி கணேசன் இயக்க உள்ள வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில், நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா, தற்பொழுது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக, அவரை மையப்படுத்தியக் கதைகளை, தேர்வு செய்து நடித்து வருகின்றார். அவர் நடித்துள்ள அரம், டோரா உள்ளிட்டப் படங்கள் வரிசையில் தற்பொழுது புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

தற்பொழுது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் படங்களுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து, வீரமாகப் போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் கதையினை இயக்குநர் சுசி கணேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தக் கதையினை நயன்தாராவிடம் கூறியதாகவும், அது நயன்தாராவிற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, நடிகை நயன்தாரா வீரமங்கை வேலுநாச்சியாராக நடிக்க உள்ளார் என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS