நயன்தாரா 20 லட்சம் நிதியுதவி! அஜித் விஜய் என்ன செய்கின்றார்கள்?

04 April 2020 சினிமா
nayanthara20l.jpg

லேடி சூப்பர்ஸ்டார் என, ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தன்னுடைய பங்காக 20 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸானது, தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பெப்சி ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அன்றாடம் வரும் ஊதியத்தினை வைத்துப் பிழைப்பு நடத்துகின்ற அவர்கள், சினிமா சூட்டிங் ரத்தின் காரணமாக, வீட்டிலேயே இருக்கின்றனர். இதனிடையே, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு, பெப்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்களுடைய சார்பில் நிதி உதவியினை அளித்தனர். நடிகர் பார்த்திபன், மனோபாலா உள்ளிட்டோர் பொருளுதவி அளித்தனர். இந்நிலையில், தற்பொழுது நடிகை நயன்தாரா, தன் பங்காக 20 லட்ச ரூபாயினை, நிதியாக வழங்கி உள்ளார். இது அவருடைய ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான் எனப் போட்டிப் போடும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் இன்னும், இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது தான் வேதனையான விஷயமாகும்.

HOT NEWS