வெற்றியை என் தலைக்கேற விடமாட்டேன்! நயன்தாரா பேட்டி!

08 October 2019 சினிமா
airaa.jpg

வாழ்வில் பெறும் வெற்றிகளை நான் தலைக்கேற விட்டதில்லை என, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார்.

நடிகை நயன்தாராவை தெரியாத, திரைப்பட ரசிகர்கள் கிடையாது. இந்திய அளவில் பெரிய ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தென் இந்தியத் திரையுலகின், லேடி சூப்பர் ஸ்டாராகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகின்னறார்.

அந்த அளவிற்கு, புகழ் பெற்ற அவர், சினிமா உலகில் பல வெற்றிகளை பெற்று, மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவர் தற்பொழுது, இந்தியாவின் பிரபல பேஷன் இதழான வோக் நிறுவனத்திற்குப் பிரத்யேகமாகப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், அவர் தன்னுடைய தலைக்கு, வெற்றியை ஏற்றிக் கொண்டதில்லை எனக் கூறியுள்ளார். வெற்றியை ஒரு நாளும் தலைக்கேற விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், என்னை, ஏளமாக, கிண்டலாக, பார்த்து சிரித்தவர்களுக்கு நான் ஒரு போதும் பதில் சொன்னதில்லை. மாறாக, என்னுடைய வெற்றிப் படங்களை, பதிலாகத் தருகின்றேன் என்றார்.

மேலும் அவர், நான் ஒரு வித பயத்துடன் வாழ்கின்றேன். சரியான வெற்றிப் படத்தை தரமாட்டேனா என்றப் பயம் உள்ளது என்று கூறியுள்ளார். ஊடகங்களை ஏன் தவிர்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, பல முறை நான் ஊடகங்களால், தவறாக சித்தரிக்கப்பட்டது தான் என்று கூறியுள்ளார்.

வோக் இதழின் அட்டைப் படத்தில், நடிகை நயன்தாராவின் புகைப்படம் வெளியாகி உள்ளது. தென் இந்திய நடிகை ஒருவரின், புகைப்படம், வோக்கின் இதழில் அட்டைப் படமாக வெளியாவது இதுவே முதல் முறை.

HOT NEWS

S