நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷால் மற்றும் நடிகர் கார்த்தியினை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா எனப் படம் ஒன்றினைத் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஒரு சிலப் பிரச்சனைகள் காரணமாக, இந்தப் படத்தில் இருந்து நடிகர் விஷால் விலகினார். இந்நிலையில் இந்தப் படத்தின் கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. இந்தப் படத்தினை பிரபுதேவா இயக்குவதாகக் கூறப்பட்டு உள்ளது. இந்தப் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ரோஜா எனப் பெயரிட்டுள்ளனர்.
மேலும், இந்தப் படத்தினை கொரோனா வைரஸிற்கான ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன், சூட்டிங்கினைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்காக நடிக்க உள்ள நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்யும் செயலானது நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து, நயன்தாராவிடம் பேச உள்ளனர்.
நயன்தாரா ஒப்புக் கொண்டால், இந்தப் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, இந்தப் படத்தின் இயக்குநரான பிரபுதேவாவும் காதலித்து திருமணம் செய்தனர். அவருக்காக கையில் டாட்டூ குத்திக் கொண்ட நயன், இந்து மதத்திற்கு மாறினர். பின்னர், இருவரும் பிரிந்ததும் தற்பொழுது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.