நீட் ஜேஇஇ தேர்வு நடைபெறும்! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

27 August 2020 அரசியல்
neweducationpolicy20.jpg

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் என, தேசிய தேர்வு முகமைத் தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், கல்லூரித் தேர்வுகள், பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், அரியர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ தேர்வினை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்கு இந்தியாவின் பலப் பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சோனு சூட் உட்படப் பல பிரபலங்கள், இந்த தேர்வினைத் தள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களும் இந்தத் தேர்வினைத் தள்ளி வைக்க வேண்டும் என்றுக் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இது குறித்துப் பதிலளித்துள்ள தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் இந்த தேர்வினை வைக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்றுக் கூறியுள்ளார்.

இது குறித்துப் பதிலளித்துள்ள தேசியத் தேர்வு முகமை அமைப்பானது, இந்தத் தேர்வினை வைக்காவிட்டால் இந்த கல்வியாண்டே வீணாகி விடும். மாணாக்கரின் ஒரு ஆண்டுக் கல்வியானது பாழாகிவிடும் எனவும், இது குறித்துக் கேட்டக்கப்பட்ட கருத்தில், பல மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றுக் கூறியுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

HOT NEWS