2 கோடி இமெயில்களை அனுப்பிய ஐஆர்சிடிசி! மோடி சீக்கியர்களுக்கு ஆதரவானவர் என மெயில்!

12 December 2020 அரசியல்
irctcrails.jpg

மோடி சீக்கியர்களுக்கு ஆதரவு தருபவர் எனவும், போராட்டக்காரர்களுக்காக அவர் 13 முடிவுகளை வைத்திருக்கின்றார் எனவும், சுமார் ஒரு கோடியே 80 லட்சம் பேருக்கு ஐஆர்சிடிசி மெயில் அனுப்பி உள்ளது.

இந்தியாவின் ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்சிடிசி அமைப்பானது, தற்பொழுது தன்னுடைய வலைதளத்தில் பதிவு செய்திருந்த அனைத்து பயனர்களுக்கும் சுமார் 47 பக்கங்கள் அடங்கிய புக்லெட் ஒன்றினை அனுப்பியுள்ளது. அரசாங்கத்தின் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் என்றப் பெயரில் இந்த செயலினைச் செய்துள்ளது. இந்த புக்லெட்டுகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழியில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த புக்லெட்டுகள் பெரும்பாலும், பஞ்சாப் மக்களை சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், சீக்கியர்களுக்கு மட்டும் இந்த மெயில்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்பதை அலுவலர்கள் மறுத்து உள்ளனர். இந்த புக்லெட்டுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

HOT NEWS