நீண்ட நாட்களாக தயாராகி வந்த திரைப்படம் நீயா-2. இது கமல்ஹாசன்-ஸ்ரீப்ரியா நடித்த நீயா படத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தில், நடிகர் ஜெய், கேத்ரின் தெரஷா, வரலெட்சுமி, ராய் லெட்சுமி, பால சரவணன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார் எல்.சுரேஷ்.
படத்தில் இரண்டு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் ஹீரோவாக, வருகிறார் நடிகர் ஜெய். அந்த ரெண்டு பேர் யார்ன்னு சொல்ல முடியாது. திரையரங்கில் பார்த்து ரசிக்கவும்.
படத்தின் சிறிய காட்சிகளில் மட்டும் வரலெட்சுமி வந்தாலும், அவர் வரும் ஒவ்வொரு சீனும் திரையறங்கமே தெறிக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு அருமை.
ஜெய் வழக்கம் போல, அவருடைய யதார்த்த நடிப்பை காட்டியுள்ளார். ஆனால், அது இந்தப் படத்துடன் ஒட்டவில்லை. லெட்சுமி ராய் எப்பொழுதும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தார். உண்மையில், இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை, காட்டு காட்டு என, காட்டி மிரட்டியுள்ளார்.
படத்திற்கு தேவையில்லாத காமெடிகள், நீண்ட பிளாஷ் பேக் என, படத்தில் பல இடங்களில், இயக்குநர் சொதப்பியிருக்கிறார். விஎஃப்எக்ஸ் காட்சிகள் அருமை என்று தான் கூற வேண்டும். சில ஆண்டுகளாக, பாம்பு படம் வராததால் இந்தப் பாம்பு படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அவ்வாறு எதிர்ப்பார்க்காமல் இருந்தாலே, இப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.
படத்தில் வரும் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்ற பாடல் மட்டும் தான், பழைய நீயா படத்தினை ஞாபகப்படுத்துகிறது. அதைத் தவிர, இப்படத்திற்கும், கமல்ஹாசனின் நீயா படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
நீயா திரைப்படம் ரேட்டிங் 2/5