இரண்டாவது சூரியன் உண்மையில் உள்ளதா? நிமிஸிஸ் எனும் ஆச்சர்யம்!

19 May 2020 அமானுஷ்யம்
secondsun.jpg

நாம் வாழும் இந்தப் பால்வெளி அண்டத்தில், ஒரே ஒரு சூரியனே உள்ளது. ஆனால், விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இதில், இரண்டு சூரியன்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதுகின்றனர்.

ஒவ்வொரு 27 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை, புவியானது முழுமையான அழிந்து பின்னர் மீண்டும் உயிர்கள் உருவாகின்றன என, 1984ம் ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அதே போல், 1984ம் ஆண்டு காலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகப் பேராசிரியரான ரிச்சர்ட் முல்லர், ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி, 1.5 ஒளி ஆண்டுகள் தொலைவில், சிவப்பு நிறத்தில் இருந்திருக்கலாம் எனக் கூறியிருந்தார். பின்னர் வந்த ஆய்வுகளின் படி, இந்த நிமிசிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரமானது, இருந்திருக்கலாம் எனவும் அது, வியாழனை விட, சற்று பெரியதாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்பட்டன.

அந்த நட்சத்திரத்தில், அடர்த்தியான மேகங்களும், பனிப்பாறைகளும் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால் காலப்போக்கில் அதில் இருந்தப் பனிப்பாறைகள் வெப்பத்தின் காரணமாக உருகி இருக்கலாம் எனவும், இதனால் அது விண்கல்லாக மாற்றமடைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதுவரை, இந்த நிமிஸிஸ் நட்சத்திரத்தினை யாரும் அடையாளம் காண இயலவில்லை. இந்த நட்சத்திரமானது, பண்டையக் காலத்தில் கண்களுக்குத் தெரிந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

HOT NEWS