கூர்கா படை முன்னால் இந்திய இராணுவம் நிற்பது கடினம்! நேபாளம் அதிரடி!

26 May 2020 அரசியல்
nepalarmy.jpg

எங்களுடைய கூர்கா படைக்கு முன்னால், இந்தியாவின் இராணுவம் எதிர்த்து நிற்பது சவாலான விஷயம் என, நேபாள நாட்டின் இராணுவத் தளபதி ஈஸ்வர் போக்ரெல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில், நேபாளத்தின் லிபுலேக், கலாபானி, லிம்பியாதூரா உள்ளிட்ட பகுதிகளில் சிலப் பிரச்சனைகள் இருந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு, நேபாளப் பிரதமர் இந்தியா மீது குறை கூறி வருகின்றார். இந்தியாவில் இருந்து வருபவர்களால் தான், எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது என்றுக் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், நேபாள நாட்டின் இராணுவத் தளபதியான ஈஸ்வர் போக்ரெல் பேசுகையில், இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக நேபாள நாடு, பலத் தியாகங்களை செய்துள்ளது. தொடர்ந்து எங்களுடைய உணர்வுகளை, இந்தியா இராணுவத்தின் தளபதி கிண்டல் செய்து வருகின்றார். எங்களுடைய இராணுவம், அரசாங்கத்திற்காகவும், அரசியலமைப்பிற்காகவும் போராடத் தயாராகவே உள்ளது.

எங்களுடைய கூர்கா படைக்கு முன்னால், இந்திய இராணுவத்தால் எதிர்க்க முடியாது. இந்திய இராணுவத்திற்கு எங்கள் கூர்கா படை மிகவும் சவாலாக இருக்கும். இடம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளுக்கு, இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றுக் கூறினார்.

முன்னதாக, இந்திய இராணுவத்தின் தளபதி நார்வானே பேசுகையில், நேபாளம் வேறொருவரின் சார்பாக தற்பொழுது குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS