உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது! நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு!

14 July 2020 அரசியல்
kpsharmaoli.jpg

உண்மையான அயோத்தியானது நேபாளத்தில் தான் உள்ளது என, நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறியுள்ளார்.

நேபாள பிரதமர், தற்சமயம் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரானக் கருத்துக்களையும், செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றார். அவர் தற்பொழுது புதியதாக, இந்தியாவில் சர்ச்சையினை ஏற்படுத்தும் அதிரடிக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். தெற்கு நேபாளத்தின், பிர்குஞ்ச் மேற்குப் பகுதியான தோரியில் தான், உண்மையான அயோத்தி உள்ளது.

அங்கு தான், பிரபு ஸ்ரீராமர் பிறந்தார். வால்மீகி ஆசிரமம் நேபாளத்தில் தான் உள்ளது. குழந்தைக்காக தசரதசக்ரவர்த்தி நடத்திய யாகமானது, ரிடி என்ற இடத்தில் தான் நிகழ்ந்தது. தற்காலத்தில், நேபாளத்தின் வரலாறு திரித்துக் கூறப்பட்டு வருகின்றது. நேபாளத்தில் தான், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், ஞானமும் பிறந்தது. ஆனால், தொடர்ந்து அவைப் பின்பற்றப்படாமல் போய்விட்டன என ஒலி பேசியுள்ளார்.

இதற்கு, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள பண்டிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராமர், உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தான் பிறந்தார் எனவும், நேபாள மன்னர் தேவையில்லாத சர்ச்சையினை ஏற்படுத்தி வருகின்றார் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

HOT NEWS