மூளையை உண்ணும் அமீபா! அமெரிக்காவில் புதிய எச்சரிக்கை அறிவிப்பு!

08 July 2020 அரசியல்
amoeba.jpg

மூளையை உண்ணும் அரிய வகை அமீபா குறித்து, அமெரிக்காவின் சிடிசி அமைப்பானது புதிய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ளது தம்பா நகரம். அந்த நகரத்தில் உள்ள ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்ததில், புதிய வகை தொற்று ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அந்தத் தொற்றானது, அப்பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பரவி இருக்கும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. அவர் பருகிய சுகாதாரமற்ற நீரில், அரிய வகை அமீபா இருந்துள்ளதும், அது அப்பகுதி குடிநீரினைக் குடித்ததால் இவருக்கு நெக்லேரியா பவுலேரி என்றப் புதிய நோய் பரவி இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த அமீபா நம்முடைய மூக்கினுள் சென்று, இரத்தக் குழாய் அல்லது மூச்சுக் குழாய் வழியாக மூளையினை அடையும். மேலும், இவை அப்பகுதியிலேயே தங்கி, மூளையினை கொஞ்சம் கொஞ்சமாகத் திண்று உயிர்வாழும் தன்மையுடையதாக, சிடிசி அமைப்பானது தன்னுடைய வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளாக, காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாசனை மற்றும் நாவின் சுவையில் மாற்றம், தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS