பிரதமர் குடியரசுத் தலைவருக்கான விமானங்கள் இந்தியாவிற்கு வந்தன! சிறப்பம்சங்கள் என்னென்ன?

03 October 2020 அரசியல்
boeing.jpg

இந்தியப் பிரதமருக்காகவும், குடியரசுத் தலைவருக்காகவும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இரண்டு போயிங் 777 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

கடந்த 2019ம் ஆண்டு, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்காக புதியதாக இரண்டு விமானங்களை வாங்குவதற்காக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக 1422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு விமானங்களை வழங்க, போயிங் நிறுவனமும் ஒப்புதல் அளித்தது. இந்த 777 விமானத்தினை இந்தியாவிற்கு தற்பொழுது அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றித் தற்பொழுது பார்ப்போம்.

இந்த விமானத்தில், மருத்துவக் குழுவிற்கான அறை, பாதுகாப்பு குழுவினருக்கான அறை, கான்ப்ரன்ஸ் ஹால், மருத்துவக் குழுவிற்கான அறை, பத்திரிக்கையாளர்களுக்கான அறை, பிரம்மாண்டமான அறை எனப் பல்வேறு சிறப்பம்சங்கன் உள்ளன. இந்த வசதிகள் அனைத்தும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய இருவரின் விமானங்களின் இருக்கும்.

இந்த விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் ஏவுகணைத் தடுப்பு அம்சம் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், எதிரிகளின் ஏவுகணைகளால் துல்லியமாக இந்த விமானங்களைக் குறி வைக்க இயலாது. இதனால், எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பிக்க இயலும். Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) என்ற ஏவுகணைத் தொழில்நுட்பமும் உள்ளதால், இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானவை.

இந்த விமானத்தில் GE90-115BL என்ற இரட்டை என்ஜின்கள் உள்ளதால், இந்த விமானம் அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் பறக்க இயலும். இந்த வசதிகள் அனைத்தும் அமெரிக்க அதிபருக்குரிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் மட்டுமே உள்ளன. இந்த விமானத்தின் எடை சுமார் 143 டன்கள் ஆகும். இதனால், 43,100 அடி உயரத்தில் கூட லாவகமாக எவ்வித சிரமமும் இன்றிப் பறக்க இயலும். இந்தியாவில் கிளம்பினால் அமெரிக்கா வரைக் கூட, எங்கேயும் நிற்காமல் வேகமாகப் பறக்கும் சிறப்பம்சம் வாய்ந்தாக இது தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த விமானத்தினை பயிற்சி பெற்றி இந்திய விமானப்படை விமானிங்கள் இயக்க உள்ளனர். அதற்கான தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS