சீனாவில் புதிய புபோனிக் ப்ளேக்! மோசமாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

06 July 2020 அரசியல்
marmot.jpg

சீனாவில் தற்பொழுது புதியதாக புபோனிக் ப்ளேக் என்ற, புதிய நோயானாது வேகமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது.

சீனாவில் உள்ள பெரிய வகை மர்மோத் என்ற அணில்களை, மேற்கு மங்கோலியப் பகுதியில் இருக்கின்ற இருவர் உண்டுள்ளனர். அவர்களுக்கு திடீரென்று உடல்நிலை மோசமானதால், அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில், தங்களுடைய உடல்களைப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், அவர்களுக்கு புதிய வகை வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவர்களை அப்பகுதி மருத்துவர்களும், ஆய்வாளர்களும் தனிமைப்படுத்தினர்.

மேலும், அவர்களுடைய இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவர்களுக்கு புபோனிக் ப்ளேக் என்ற நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும், சுமார் 146 பேரினைத் தனிமைப்படுத்தி சோதித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து புதிய பானடெமிக் அறிவிப்பினை, சீன தன்னாட்டு சுகாதாரத்துறை மூலம் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றானது, மூன்றாவது கட்டத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டது. இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்களை சரியான நேரத்தில், சிகிச்சைக்கு உட்படுத்தாவிடில் அடுத்த 24 மணி நேரத்திலேயே மரணமடைவர் என உலக சுகாதார மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த வைரஸால் கடந்த ஆண்டு இருவர் மரணமடைந்து இருந்தனர்.

கடந்த ஆண்டு, சீனாவினைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், மர்மோத் வகை அணில்களைப் பிடித்து, பச்சையாகவே உண்டுள்ளனர். இதில், அவர்கள் அடுத்த நாளே மரணமடைந்து உள்ளனர். ஏற்கனவே, சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில், தற்பொழுது புபோனிக் ப்ளேக் எச்சரிக்கையும் உருவாக்கப்பட்டு உள்ளது கவலையடையச் செய்துள்ளது. கடந்த வாரம், சீனாவில் ஜி4 என்ற புதிய வகைப் பன்றிக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS