உலகின் முதல் ப்ரூப் ஹெல்மெட்! இந்திய இராணுவ மேஜர் கண்டுபிடிப்பு!

08 February 2020 அரசியல்
armyhelmet.jpg

இதுவரை, உலகளவில் ஏகே-47 துப்பாக்கியின் குண்டினை, ஊடுறுவ விடாமல் தடுக்கும், புல்லட் ப்ரூட் கவசங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், இந்திய இராணுவத்தினைச் சேர்ந்த இராணுவ மேஜர், புல்லட் ப்ரூப் ஹெல்மெட்டினைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மேஜர் அனூப் மிஷ்ரா என்பவர், அபிதியா என்ற ப்ராஜெக்ட் திட்டத்தில், புல்லட் ப்ரூப் ஹெல்மெட்டினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவர் தற்பொழுது, அவருடைய முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். அவர், சுமார் பத்து மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும், துப்பாக்கிக் குண்டு ஊடுறுவ முடியாத ஹெல்மெட்டினை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்.

உலகில் இதுவரை, ஏகே-47 துப்பாக்கியின் புல்லட்டினைத் தடுக்கும் கவச உடைகள் மட்டுமே உள்ளன. ஹெல்மெட்டுகள் இல்லை. தற்பொழுது, அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேஜர் அனூப் மிஷ்ரா, இந்திய இராணுவக் கல்லூரியினைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே, உடல்முழுவதும் பாதுகாக்கக் கூடிய, கவச உடையினைத் தயாரித்து இருந்தார்.

இந்த உடையானது, குறி வைத்துத் தாக்கும் துப்பாக்கியின் குண்டினைக் கூட ஊடுறுவ அனுமதிக்காது. அந்த அளவிற்கு தரமானதாக இருந்தது. தற்பொழுது பாஜக தலைமையிலான அரசு, 1,58,279 புல்லட் ப்ரூப் உடைகளை வாங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS