சுஷாந்த் சிங் மரணம்! நீதிமன்றத்தில் வழக்கு! தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா?

18 June 2020 அரசியல்
sushantsingh.jpg

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக, தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, தன்னுடைய சொந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவருடைய உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுஷாந்த் தூக்கிட்டதன் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால், மரணமடைந்து உள்ளார்.

இவர் மரணத்திற்கு பிரதமர் மோடி உட்படப் பலரும், தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர். அவர் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது எனவும், எனவே அதனை விசாரிக்க வேண்டும் எனவும், சுஷாந்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்ழிலையில், பீகார் மாநிலத்தின் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தன்னுடைய வழக்கில், தொடர்ந்து அவருடையப் படங்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், அதற்கு முக்கியக் காரணமாக சல்மான் கான், ஏக்தா கபூர், கரன் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட் உள்ளிட்ட எட்டு பேர் தான் காரணம் எனவும், அவர்கள் தான், தொடர்ந்து சுஷாந்தின் ஏழுப் படங்களின் வாய்ப்பினை பறித்ததாகவும், எனவே இந்திய சட்டத்தின் 109, 306, 504 மற்றும் 506 பிரிவுகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

HOT NEWS