நாகர்கோவில் மாவட்டத்தினைச் சேர்ந்த, பாலியல் புகாரில் ஈடுபட்ட காசி மீது, சென்னையினைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தினைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான காசி என்பவர், பலப் பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு, பின்னர் அந்த வீடியோவினைக் காட்டி மிரட்டி பெண்களை ஏமாற்றியதற்காக, தற்பொழுது சிறையில் உள்ளார். இந்நிலையில், அவர் மீது புதியதாக சென்னையினைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், காசி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமே எனக்கு அறிமுகம் ஆனார்.
இருவரும் நன்றாகப் பேசிப் பழகினோம். பின்னர் வாட்ஸ்ஆப்பில் சேட் செய்தோம். பின்னர் ஒரு முறை என்னைப் பார்ப்பதற்காக சென்னைக்கு அவர் வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவரைப் பார்க்க நான் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்தேன். இடையில், காரிலேயே நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது, நாங்கள் உல்லாசமாக இருந்ததை யாருக்கும் தெரியாமல், கையில் இருந்த ஸ்மார்ட்வாட்ச் மற்றும் செல்போன் மூலம் படம் பிடித்து விட்டார்.
நாளடைவில் அதனைக் காட்டி மிரட்டி, என்னிடம் பணம் பிடுங்க ஆரம்பித்தார். அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு உள்ளதை அறிந்து, நான் புகார் அளிக்க வந்துள்ளேன் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியின் லேப்டாப்பினை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டிற்குச் சென்றுள்ள காசியின் நண்பரை கைது செய்து அழைத்து வர, இண்டர்போல் உதவியினை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர்.