கீழடி கொந்தகையில் முழுமையான குழந்தையின் எலும்புக் கூடு!

08 July 2020 அரசியல்
keeladiskeletonn.jpg

சிவகங்கை மாவட்டம் கொந்தகைப் பகுதியில் முழுமையான குழந்தையின் எலும்புக் கூடானது, தற்பொழுது கிடைத்துள்ளது.

சிவகங்கையின் கீழடிப் பகுதியில் தற்பொழுது ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. கீழடியில் மட்டுமின்றி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்டப் பகுதிகளில் தற்பொழுது ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வில், ஏற்கனவே, ஒரு குழந்தையின் எலும்புக்கூடானது கண்டறியப்பட்டு உள்ளது.

அதே போல, தற்பொழுது புதிய எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது எவ்வித சேதாரமும் இல்லாமல் இருப்பதாக, தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். 95 செமீ நீளம் உள்ள இந்த எலும்புக் கூடானது, முழுமையாக இருப்பதாகவும், தலையின் மண்டை ஓடானது, 20 செமீ அளவிற்கு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த எலும்புக் கூட்டினை, ஆய்விற்கு உட்படுத்த உள்ளனர். இந்த இடம் இடுகாடாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS