சூரப்பா மீது வழக்கு! சாட்டையினை சுழற்றும் தமிழக அரசு!

13 November 2020 அரசியல்
annauniversity1.jpg

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா, தொடர்ந்து தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதாகவும், அதனை விசாரிக்க புதியதாக தனி நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டும் உள்ளது.

தமிழக அரசிடம் கேட்காமலேயே அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கான பணத்தினை அதுவே திரட்டிக் கொள்ளும் என்றுக் கூறியது, அரியர் தேர்ச்சி தடை கூறும் விவகாரம், அகில இந்தியத் தொழில்நுட்பக் குழுவிற்கு தண்ணிச்சையாக கடிதம் எழுதியது, என தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தார் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா.

அவர் மீது தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தி மற்றும் புகார் காரணமாக, தமிழக உயர்கல்வித் துறையானது விசாரணை கமிஷன் ஒன்றினை உருவாக்கி உள்ளது. இது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ள, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தனி நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த சூரப்பா, நான் எவ்வித தவறும் செய்யவில்லை எனவும், என்னுடைய மகள், சம்பளம் வாங்காமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகின்றார் எனவும் கூறினார். நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. விதிமுறைகளை மீறவில்லை. தொடர்ந்து எனக்கு முகவரி இல்லாத கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஐஐடியில் பணியாற்றிய என்னுடையப் பெண், இங்கு சேவை செய்து வருகின்றார். விசாரணைக் கமிஷன் அதன் வேலையினை, செய்யட்டும்.

நான் யாரையும் சந்திக்கப் போவதுமில்லை. பயப்பட போவதுமில்லை. நான் யார் என, மக்கள் முடிவு செய்யட்டும் என அவர் கூறியுள்ளார்.

HOT NEWS