இவர் தான் அடுத்த பிக்பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரீ போட்டியாளர்! கசிந்த தகவல்!

08 December 2020 சினிமா
maheswarianchor.jpg

தற்பொழுது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு என்ட்ரீ மூலம் மகேஷ்வரி என்றத் தொகுப்பாளினி களமிறங்க உள்ளார்.

விஜய் டிவி நடத்தி வருகின்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது, 60 நாட்களைக் கடந்து பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில், பலப் பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில், ஏற்கனவே, செய்தி வாசிப்பாளர் அனிதா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகியோர் பங்கேற்று உள்ள நிலையில், தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரீ ஆனது இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த வைல்ட் கார்ட் என்ட்ரீக்காக, விஜய் டிவியானது அசீம் என்ற சீரியல் நடிகரை, ஓட்டலில் குவாரண்டைனில் தங்க வைத்தது. ஆனால், அவர் வேறு சிலக் காரணங்களுக்காக அதில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, அந்த ஓட்டலில் தற்பொழுது நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஷ்வரி தங்க வைக்கப்படு உள்ளார். தற்பொழுது பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் எந்த ஓட்டலில் தங்கினார்களோ, அதே போல் இவரும் குவாரண்டைனில் உள்ளார்.

இதனால், இவர் தான் அடுத்து உள்ளே வரும் போட்டியாளர் எனப் பலரும் கூறிய நிலையில், அனைவருக்கும் விரைவில் சர்ப்ரைஸ் செய்தி சொல்றேன் என மகேஷ்வரி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால், அவர் தான் அடுத்தப் போட்டியாளர் என்பது உறுதியாகி உள்ளது.

HOT NEWS