இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா! விமான சேவையினை ரத்து செய்தது இந்தியா!

21 December 2020 அரசியல்
flight.jpg

இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோனாவின் காரணமாக, அந்நாட்டிற்கான விமான சேவையினை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் திடீரென்று அதிகரித்து உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டு சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அங்கு பரவியிருக்கின்ற கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்துள்ளதைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்த உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸானது, 70% கூடுதல் வேகத்துடன் பரவும் தன்மை உடையதாகப் பார்க்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு, அந்நாட்டில் அவசர அவசரமாக ஊரடங்கு உத்தரவானது அமல் படுத்தப்பட்டு உள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கானது அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பொதுமக்கள் வெளியில் வரக் கூடாது என, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். அங்கு பரவி வருகின்ற இந்த வைரஸினைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரியா, பெல்ஜியம், துருக்கி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் விமானப் போக்குவரத்து சேவையினை ரத்து செய்துள்ளன.

இந்த சூழலில், இந்திய அரசும் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவும் தன்னுடைய விமானப் போக்குவரத்தினை வருகின்ற டிசம்பர் 22ம் தேதி இரவு 11.59 மணி முதல், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை, ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.

HOT NEWS