புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! மீண்டும் சிக்கலில் தமிழகம்?

28 November 2020 அரசியல்
newcyclone.jpg

புதியக் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி இருப்பதால், மீண்டும் தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

இந்த வாரம் முழுக்க, தமிழகம் உட்பட இந்தியாவின் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த நிவர் புயலானது, ஒரு வழியாகக் கரையினைக் கடந்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் கடுமையான மழையானது தொடர்ந்து பெய்து வருகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியானது, இந்த புயல் காரணமாகவும், தொடர்ந்து பெய்து வந்தக் கனமழைக் காரணமாகவும் திறக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் மழையின் அளவுக் குறைந்துள்ளது.

இதனிடையே, நிவர் புயலானது ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இதனைப் போல, புதியக் காற்றழுத்த தாழ்வு மையமானது தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், விரைவில், இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது புயலாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS