டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், தென் தமிழகத்தில் அடை மழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியினை நிவர் புயலானது, கடந்து சென்றது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பின. இந்த நிலையில், தற்பொழுது தெற்கு வஙகக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது.
இது தற்பொழுது அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது விரைவில் புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன எனவும், இதன் காரணமாக தமிழகத்தின் தெற்கு மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயலின் காரணமாக, கன மழையானது பெய்யும் எனவும், குறிப்பாக டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை, இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மையமானது, புயலாக மாறி கரையினைக் கடக்க உள்ளது.
இந்தத் காரணங்களால், இந்தத் தேதிகளில் அதிக கனமழைப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புயலானது, கன்னியாகுமரி வழியாக தமிழகத்தினை அடையும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. இதனால், வருகின்ற டிசம்பர் 1, 2ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.