தமிழகத்தின் பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் பெரிய மிருகமாகக் கருதப்பட்ட டைனோசரின் முட்டைகளை தமிழகத்தில் கண்டுபிடித்து உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஏரியில் மணல் அள்ளும் பணியானது நடைபெற்று வருகின்றது. அந்த ஏரியில் மணல் எடுக்கையில், சிதைந்த நிலையில் கடலில் வாழக் கூடிய நத்தைகளின் படிமங்கள் கிடைத்தன. மேலும், பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன.
அவைகளுடன் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் போன்ற, பெரிய அளவிலான பாறைப் போன்றவைகளும் கிடைத்துள்ளன. இவைகள் டைனோசர் முட்டைகள் தான் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவைகளைத் தற்பொழுது அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது. இவைகள் டைனோசர் முட்டைகளாக இருக்கும் பட்சத்தில், வரலாற்றில் மாபெரும் மாற்றமே உருவாகி விடும்.
இந்த டைனோசர்கள் 12 முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் வாழ்ந்தவை. இவைகளின் முட்டைகள் தமிழகத்தில் இருந்தால், தமிழகத்தின் வரலாறு மட்டுமின்றி, உலக வரலாறும், அதன் ஆய்வுகளும் முழுமையாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.