சீனாவில் தற்பொழுது அதிக வேகமாக கொரோனா வைரஸானது, அங்குள்ள பீஜிங் நகரில் பரவி வருவதால், அவசர நிலையானது பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி, உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இந்த வைரஸானது, சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து முதன் முதலாகப் பரவ தொடங்கியது. அந்த வைரஸிற்கு தற்பொழுது உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த மருந்தினைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இருப்பினும், சரியான மருந்தினைத் தேர்வு செய்வதில், குழப்பம் நீடித்து வருகின்றது. சீனாவில் கடுமையானக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதன் விளைவாக, இந்த வைரஸானது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சூழலில், தற்பொழுது சீனாவின் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 13 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு, அந்த மாகாணத்தில் அவசர நிலையானது பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்பொழுது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், இந்த அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது எனவும், தீவிரமாக இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அரசாங்கம் ஈடுபட்டு உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை நீடித்தால், மீண்டும் உலகம் முழுவதும் 2021ம் ஆண்டும் கடுமையான ஊரடங்கானது பின்பற்றப்படும் என அச்சம் ஏற்பட்டு உள்ளது.