மருத்துவப் பணியாளர்களுக்காக அவசர சட்டம்! அமித் ஷா அதிரடி!

22 April 2020 அரசியல்
prakashjawadekar12.jpg

மருத்துவ ஊழியர்களைத் தாக்கினால், சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தக் கூட்டமானது, பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பது குறித்து பேசப்பட்டது.

இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த, பிரகாஷ் ஜவ்டேகர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இந்தியா முழுவதும், உயிரைக் காக்கும் சேவையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது, பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை முன்னிட்டு, அவர்களைக் காப்பதற்காக அவசர சட்டம் ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என்றுக் கூறினார்.

ஒரு வேளை சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டால், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார். அதே போல், ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

அவர்களுடைய வாகனங்களோ, மருத்துவக் கிளினிக்குகளோ சேதப்படுத்தப்பட்டால், அதன் சந்தை விலையை விட, இருமடங்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று கூறினார். மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் தாக்கினால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும், அவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாத அளவில் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது.

இந்த அவசர சட்டத்திற்கு, அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய ஆதரவினை கொடுத்துள்ளதாகவும், விரைவில் இந்த சட்டம் குடியரசுத்தலைவர் அனுமதியுடனும், ஒப்புதலுடனும் அமலுக்கு வரும் என்றுக் கூறினார்.

HOT NEWS