செயற்கைக் கோள்களை, மனிதன் விண்வெளிக்கு அனுப்ப ஆரம்பித்த நாள் முதல், இன்று வரை புதிது புதிதாக, கிரகங்களையும், விண்வெளிப் பொருட்களையும் மனிதம் கண்டுபிடித்து வருகிறான். அவைகளில், பல ஆச்சர்யத்தையும், பல வியப்பையும் அளிக்கும் வகையில் உருவானவை. அவைகளில் ஒன்றினைத் தற்பொழுது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நம் சூரியக் குடும்பத்தில் இருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். HAT-P-11b, என்றுப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கிரகம், பார்ப்பதற்கு நெப்டியூன் போலவேக் காட்சியளிக்கின்றது. அந்தக் கிரகத்தில் சுமார் 1,022 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு சராசரியாக வெப்பநிலை இருக்க, வாய்ப்பிருக்கலாம் எனவும், அந்தக் கிரகம் முழுவதும், ஹீலியம் வாயு நிரம்பி இருப்பதாகவும், கருதுகின்றனர். மேலும், இந்த கிரகம் பார்ப்பதற்கு ஹீலியம் பலூனைப் போல இருப்பதாகவும் கூறுகின்றனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ளத் தூரத்தை விட, அந்த சூரியக் குடும்பத்தில், அந்தக் கிரகத்திற்கும், அந்த சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கின்றது. இந்தக் கிரகத்தில் இரவு நேரம் நிகழும் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு 10,000 கிலோ மீட்டர் அளவிற்கு, ஹீலியம் வாயு வெளிப்படுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.